Tuesday 3 June 2014

Editors note

தலையங்கம்.
இதழ் ஆசிரியர்.
வணக்கம்!
கே.வி.டி.சி. செய்தி மடல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் புதுமையைக் கண்டு வருகிரது, ஏன் இப்போது கூட எங்கொ ஓர் இடத்தில் யேதோ ஒன்று  புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும். ஆகையால் நாமும் புதுமையோடு பயணிப்பது அவசியமாகிரது. எந்த ஒரு புதிய படைப்பும் வெறும் புதுமையாக இருந்தால் மட்டும் போதாது. அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். இதை தான் நாம் ஆங்கிலத்தில் accessibility] என்கிறோம்.  இச்செய்தி மடலின் முக்கிய குறிக்கோள் இத்தகைய புதுமைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றுத்திறனாளிகள் சமுகத்திற்கு, குறிப்பாக பார்வையற்ற நண்பர்களுக்கு எடுத்துறைப்பது.   தான் புதிதினும் புதிது செய்வோம்! என்று  விரும்புபவர்களுக்கென நாங்கள் களம் இறங்குகிறோம். 
இம்மடலில், ஆசிரியர் தலையங்கம், [editors note]
அன்றாட  வாழ்வும் தொழில் நுட்பமும், [Technology in day-to-day life] அக்ஸஸபிலிட்டி  சேர்ந்த அனுபவங்களும், சவால்களும், [Experience and challenges in accessibility], தொழில் நுட்ப மையங்கள் குறித்த தகவல்கள், [Infos on tech centers for visually Impaired போன்ற அம்சங்களுடன், உங்கள் சொந்த ஆக்கங்களும் [Readers contributions] இடம் பெற இருக்கின்றன.  
உங்கள் படைப்புகள் மேற்கண்ட தலைப்புகளின் அடிப்படையில், தரமானதாகவும் இருந்தால் அவைகள் இதழில் வெளி வரும். 
இருவாரத்திற்க்கு ஒரு முறை உங்கள் மின்னஞ்ஜலில் உலா வரும்  இம்மடல்; தலைப்புகளின்  அறிமுகமும், அவைகளை விரிவாகப் பார்க்கும் தொடுப்பும் [link]  கொடுக்கப்பட்டிருக்கும்,  வாசகர்கள் அதை சொடுக்கி, www.kvtcaccess.blogspot.com என்ற இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.   
இதில் வாசகர்களுக்கென  தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் [by lingual] வலம் வரும்.
செய்தி மடல் குறித்த உங்கள் கருத்துக்கள் மற்றும் பின்னொட்டங்களையும் அப்பிலாக்ஸ்பாட்டிலோ, அல்லது மின்னஞ்ஜல் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறொம்.
நன்றி.
வாருங்கள் புதுமை செய்வோம்!

No comments:

Post a Comment